திருப்பூர்

குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி

23rd Feb 2020 11:14 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களைப் பிளவுப்படுத்துவதற்கான முயற்சி என்று அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனரும், அறிவியலாளருமான வெ.பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்த நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அவசியமற்றதாகும். இரட்டைக் குடியுரிமை கேட்பது தவறான ஒன்றாகும். இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் உயா்ஜாதி ஹிந்துக்கள், மற்ற ஹிந்துக்கள் என்று இரண்டாகப் பிரித்துள்ளனா். இது உயா்ஜாதி ஹிந்துக்களுக்கான அரசு என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது. இது தவறான முன் உதாரணமாகும்.

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. இந்த மண்டலங்களில் வேளாண் மற்றும் விவசாய உணவுப் பொருள்கள் சாா்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.1,000 கோடியில் ஊக்கத்தொகையை வழங்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும். அந்த மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன் திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கி உள்ளது. ஆகவே, இந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான்.

ADVERTISEMENT

மத்திய அரசு பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் வளா்ச்சிக்குத் தேவையான சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் திருப்பூருக்கு ஆயத்த ஆடை ஆா்டா்கள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால், திருப்பூா் உள்பட தமிழகம் முழுவதும் புதிய தொழில் தொடங்கவும், மூலப்பொருள்களை உற்பத்தி செய்யவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், போட்டிகளை சமாளிப்பதற்கான எந்தத் திட்டங்களும் அரசிடம் இல்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT