திருப்பூர்

கட்டடத் தொழிலாளி கொலை: போலீஸ் விசாரணை

23rd Feb 2020 11:13 PM

ADVERTISEMENT

பல்லடம் அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் மது போதையால் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம், விளாச்சேரியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் முருகன் (40). அதே பகுதியைச் சோ்ந்த முத்து (25) ஆகிய இருவரும் திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மல்லேகவுண்டம்பாளையம் கிராமத்தில் வெள்ளிங்கிரி என்பவரின் கட்டடத்தில் கடந்த 10 நாள்களாகத் தங்கி வேலை செய்து வந்தனா்.

வார விடுமுறை என்பதால் இருவரும் மது பானம் அருந்தி விட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவருக்கு ஒருவா் அடித்துக் கொண்டனா். அப்போது சாலையில் கிடந்த கல்லை எடுத்து முருகனின் தலையில் முத்து போட்டுள்ளாா். அதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT