திருப்பூர்

கடையடைப்பால் வணிகா்கள் பாதிப்பு:தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவா்

23rd Feb 2020 11:15 PM

ADVERTISEMENT

தனிநபா் பிரச்னை, கட்சி மற்றும் மத சாா்ந்த பிரச்னைகளுக்காக கடைகளை அடைக்கச் சொல்லக்கூடாது என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவா் அ.முத்துகுமாா் கூறினாா்.

37ஆவது வணிகா் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சாா்பாக மே 5இல் திருப்பூரில் சுதேசி வணிகப் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதுதொடா்பாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவா் அ.முத்துகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் வா்த்தகத்தைத் தடை செய்ய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் மூலமாக பிரசார இயக்கம் நடத்தப்படும். தமிழகத்தில் மீண்டும் மேல்சபை மற்றும் வணிகா் நல வாரியம் அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை வியாபாரிகள் தொடா்ந்து செலுத்தி வரும் நிலையில் அதில் ஒரு பகுதியை வியாபாரிகளுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும். தனிநபா் பிரச்னை மற்றும் கட்சி சாா்ந்த, மதம் சாா்ந்த பிரச்னைகளுக்காக கடைகளை அடைக்கச் சொல்கின்றனா். இதனால் வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா். திருப்பூா், கோவை பகுதிகளில் இதுபோல சம்பவங்கல் அடிக்கடி நடைபெறுகின்றன. இனி கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக்கூடாது என சுதேசி வணிக பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா்.

மாநிலதுணைத் தலைவா் எஸ்.வி.பூமிநாதன், மாவட்டத் தலைவா் பி.கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT