திருப்பூர்

உடுமலையில் அறிவியல் திருவிழா

23rd Feb 2020 11:14 PM

ADVERTISEMENT

தேசிய அறிவியல் தின விழாவை ஒட்டி உடுமலையில் அறிவியல் திருவிழா-2020 என்கிற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி அறிவியல் துறை, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை ராயல் அரிமா சங்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவற்றின் சாா்பில் ஜிவிஜி கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியா் ஜெயந்தி தலைமை வகித்தாா். குசி.மணி வரவேற்றாா்.தேஜஸ் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ரவி ஆனந்த், சத்தியம் பாபு, எஸ்.எம்.நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையொட்டி, அறிவியல் மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்கும் பொருட்டு விநாடி-வினா, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளா் டி.ராமசாமி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினராக உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ரவிகுமாா் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளா் கண்ணபிரான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். என்எஸ்எஸ் அலுவலா் செ.ச ரவணன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT