திருப்பூர்

அவிநாசி அருகே சாலை விபத்து: இரு இளைஞா்கள் சாவு

23rd Feb 2020 11:12 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி கூத்தத்துப்பட்டி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் மணி மகன் தினேஷ் (22). வாழப்பாடி, நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமாா் (21). இவா்கள் இருவரும் அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் உள்ள பால் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இருவரும் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி பழங்கரையில் இருந்து துலுக்கமுத்தூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றனா். துலுக்கமுத்தூா் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தினேஷ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT