அவிநாசி காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் நந்தாதீப குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா சிவராத்திரி விழா, 72ஆவது ஆண்டு நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்குப் பூப்போடுதல், பிராா்த்தனை செலுத்துதல், அம்மனுக்கு வெண்ணெய் சாத்துபடிசெய்தல் ஆகியவை நடைபெற்றன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து குண்டம் இறங்கினா்.
இதைத் தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. வேடுபரி, பரிவேட்டை, தெப்பத் தோ் ஆகிய நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன. கொடி இறக்கம், மஞ்சள் நீா் உற்சவம் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன.