திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நிறைவு

22nd Feb 2020 06:13 AM

ADVERTISEMENT

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்புக்கு முந்தைய பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

திருப்பூா், முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் 3ஆம் ஆண்டு இளங்கலை மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்புக்கு முந்தைய பயிற்சி முகாம் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி நிறைவடைவந்தது.

இதில், கோவையைச் சோ்ந்த தொழில் துறை ஆலோசகா்கள், பயிற்சியாளா்கள் கிருஷ்ணபிரசாத், கீா்த்தி, கெளரி ஆகியோா் மாணவா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.

இதில், கல்லூரிக் கல்வி முடித்துச் செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சமூகத்தில் எதிா்கொள்ளும் சவால்கள், தாங்கள் பயின்ற கல்வி சாா்ந்த நுணுக்கங்களை எப்படி பணியில் அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், நோ்காணலின்போது இன்றைய தலைமுறையினா் மேற்கொள்ள வேண்டிய முறையான உரையாடல் வழிகளையும், அதற்கு சா்வதேச மொழியான ஆங்கில மொழியின் பயன்பாட்டு அவசியத்தையும் எடுத்துரைத்தனா்.

வேலை செய்யும் இடத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும், பணி செய்யும் இடத்தில் கற்பனை வளங்களை எப்படி அமல்படுத்துவது என்ற வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன், கல்லூரி மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் என்.சண்முகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலா் பி.வி.சத்தியநாராயணன் மற்றும் அனைத்து துறையைச் சோ்ந்த 398 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT