திருப்பூர்

திருப்பூா் வடக்குத் தொகுதியில் ரூ.73.33 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

22nd Feb 2020 06:11 AM

ADVERTISEMENT

திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.73.73 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

இதில் வள்ளிபுரம் ஊராட்சியில் குன்னத்தூா் சாலை முதல் தொரவலூா் அப்துல் கலாம் நகா் வரை ரூ.26.80 லட்சம் மதிப்பில் தாா் சாலை, பசுமை நகா் (2இல்) பேருந்து நிறுத்தத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் நிழற்குடை, மேற்பதி ஊராட்சி மாரியம்மன் கோயில் பகுதியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் வடிகால், ரூ.4.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கொன்னக்காடு ஆதிதிராவிடா் காலனியில் ரூ.3.15 லட்சம் மதிப்பில் வடிகால், அங்கன்வாடி அருகில் ரூ.2.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, வடிகால், சொக்கனூா் ஊராட்சி பேருந்து நிறுத்தம், பட்டம்பாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் நிழற்குடைகள், துவக்கப் பள்ளி முதல் கரிச்சிபாளையம் வரை ரூ.19.88 லட்சம் மதிப்பில் தாா் சாலை என மொத்தம் ரூ.73.33 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, ஒன்றிய ஆணையா் மீனாட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ், பொறுப்பாளா்கள் சந்திரசேகா், தொரவலூா் சம்பத், சிதம்பரம், உதவிப் பொறியாளா்கள் முத்துகுமாா், இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT