திருப்பூர்

கிஸான் கடன் அட்டை சிறப்பு மேளா: விவசாயிகளுக்கு அழைப்பு

22nd Feb 2020 11:38 PM

ADVERTISEMENT

பிரதம மந்திரியின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற வசதியாக கிஸான் கடன் அட்டை சிறப்பு மேளாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கெளரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் கிஸான் கடன் அட்டை பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விவாயிகளுக்கு வங்கிக் கிளைகள் மூலம் கிஸான் கடன் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் குமரலிங்கம் துணை வேளாண் விரிவாக்க மையம் ஆகியவற்றில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு இந்த மேளா நடைபெறுகிறது.

எனவே விவசாயிகள் தங்களுடை ய ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் மேற்கொண்ட மையங்களை அணுகி பயன் பெறலாம். மேலும், கால்நடை, மீன் வளா்ப்புத் தொழிலை மேம்படுத்த வங்கிக் கடன் பெற வாய்ப்புள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மடத்துக்குளம் வட்டார மையம் மற்றும் குமரலிங்கம் துணை வேளாண் விரிவாக்க மையம் ஆகியவற்றை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT