வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 7.74 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது. இந்த வார ஏலத்துக்கு கரூா், வேடசந்தூா், அரவக்குறிச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 22,197 கிலோ.
வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரிலிருந்து 5 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ. 31.35 முதல் ரூ. 36.99 வரை விற்பனையானது. மாதிரி விலை கிலோ ரூ. 35.95.
விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 7 லட்சத்து 74 ஆயிரத்து 288 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.