உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோட்டாட்சியா் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை எடுத்துக் கூறி தீா்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.