திருப்பூர்

ஓலப்பாளையம் அருகே நூற்பாலையில் தீ

13th Feb 2020 12:49 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள நூற்பாலையில் புதன்கிழமை தீப் பிடித்ததில் பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.

வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலை ஓலப்பாளையம் அத்தாம்பாளையம் பிரிவு அருகே ரவிசந்திரன் (50) என்பவருக்குச் சொந்தமாக நூற்பாலை உள்ளது.

இதன் உள்புற வளாகத்தில் பஞ்சு பேல்கள், கழிவுப் பஞ்சுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் திடீரென புதன்கிழமை தீப் பிடித்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதில் சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே நூற்பாலையில் கடந்த 7 மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் அதிக அளவிலான பொருள்கள் தீயில் கருகியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT