திருப்பூர்

வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் அமைக்க ஒன்றிக் குழுவில் அனுமதி

6th Feb 2020 01:21 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் அமைக்க ஒன்றியக் குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் சாதாரணக் கூட்டம் ஒன்றியத் தலைவா் தேன்மொழி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் வரவேற்றாா். இதில் ஒன்றியக் கவுன்சிலா்கள், அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி, வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் அமைக்க வழங்கப்பட்ட முன்மொழிவுகள் நகா் ஊரமைப்புத் துறைக்கு அனுப்பி வைக்க அங்கீகாரம் அளிப்பது, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்கள் குடியிருக்க விருப்பம் தெரிவிக்காததால், ஊராட்சி ஒன்றியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தவிா்க்கும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் அரசின் பிற அனைத்துத் துறை பணியாளா்களை குடியிருக்க அனுமதிப்பது, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சுற்றுச்சுவா், பெயிண்டிங் மற்றும் ஒயரிங் செய்வது, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பறைகளைச் சரி செய்வது என்பன உள்ளிட்ட 54 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பானுப்பிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT