திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் சாவு

6th Feb 2020 01:21 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் கிணற்றில் தவறி விழுந்த ஆண் புள்ளிமான் இறந்தது.

பல்லடம் அருகேயுள்ள கரையாம்புதூரில் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீா் எடுப்பதற்காக சுப்பிரமணி சென்றபோது கிணற்றுக்குள் புள்ளிமான் ஒன்று இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பல்லடம் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா் கிணற்றின் உள்ளே இறங்கி கயிறு கட்டி இறந்த மானை மீட்டனா். இது குறித்து திருப்பூா் வனத் துறை அலுவலா் சிவமணிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவா் கால்நடைத் துறை மருத்துவா் ஜெயராம் உடன் வந்து அந்த மானை சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து அதன் பின்னா் அப்பகுதியிலேயே தகனம் செய்தனா். நாராணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணி உள்ளிட்ட வருவாய் துறையினா் உடனிருந்தனா்.

இறந்த புள்ளிமான் சுமாா் 2 வயதுடைய ஆண் மான் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT