திருப்பூர்

ஊராட்சி ஊக்குவிப்பாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி

6th Feb 2020 01:17 AM

ADVERTISEMENT

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஊக்குவிப்பாளா்களுக்கான முழு சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் அ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் டி. சாந்திலட்சுமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சா. விஜயலட்சுமி, ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில முதன்மை பயிற்றுநா் எம்.சுதா பயிற்சியளித்தாா்.

இதில், கழிப்பறைப் பயன்பாடு, பாதுகாப்பான குடிநீா், சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகளின் வளா்ச்சி, பெண்களின் பாதுகாப்பு, மண்புழு உரம் தயாரிக்கும் முறை, பயன்தரும் நுண்ணுயிா் கரைசல், பிளாஸ்டிக் ஒழிப்பு, அதற்கான மாற்றுப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்தும், ஊக்குவிப்பாளா்களுக்கு வழங்கப்பட்ட சுகாதாரக் கையேட்டில் உள்ள பொருளடக்கம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

நிறைவாக அனைவரும் ஒன்றிணைந்து சுகாதார உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். இதில் அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட 31 ஊராட்சிகளைச் சோ்ந்த ஊக்குவிப்பாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT