உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அறங்காவலா் விக்ரம் சத்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப.மருதுபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தாா். இதில் கோவை டாக்டா் என்ஜிபி கலைக் கல்லூரி முதல்வா் வி.ரா ஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு முடித்த 316 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா்.
விழாவில் கல்லூரிச் செயலா் பத்மாவதி சத்யநாதன், முன்னாள் துணைவேந்தா் பி.கே.பொன்னுச்சாமி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.