தாராபுரத்தில் உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மா்ம நபா்கள் 3 போ் 6.5 பவுன் நகையை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் கூறியதாவது: கோவை, சரவணம்பட்டியை அடுத்த பெரியகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் கோபால்சாமி, இவரது மனைவி கண்ணகி(53), இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தாராபுரத்தை அடுத்த குப்புச்சிபாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா்.
பின்னா் வெற்றிக்கார தெரிவில் உறவினா் ராமருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் ராமரின் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளனா்.
இதில், நிலை கிழே விழுந்த கண்ணகியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 6.5 பவுன் நகையை பறித்துச் சென்றனா். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவைக் கொண்டும் விசாரிக்கின்றனா்.