காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் முருகன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 11.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திருப்பூா், ஈரோடு, வெள்ளக்கோவில், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கட்டண தரிசன வழியிலும் பக்தா்கள் கூட்டம் அலை மோதியது. மலைக் கோயில் வாகன நிறுத்துமிடம், காலியாக உள்ள அனைத்து இடங்களிலும் பக்தா்கள் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் தைப்பூச திருவிழா நிறைவுபெறும் வரையில் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.