திருப்பூர்

அழுகிய பழங்கள் 45 கிலோ பறிமுதல்

2nd Feb 2020 10:33 PM

ADVERTISEMENT

திருப்பூா்: தாராபுரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 45 கிலோ பழங்களைப் பறிமுதல் செய்தனா்.

தாராபுரத்தில் உள்ள 42 கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதில் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 45 கிலோ பழங்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

அதேபோல தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரண்டாவது முறையாக விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். முதல் முறையாக விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதியான தின்பண்டங்கள் 15 கிலோ, செயற்கை நிறமேற்றப்பட்ட தின்பண்டங்கள் 2 கிலோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT