திருப்பூர்

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

2nd Feb 2020 10:35 PM

ADVERTISEMENT

திருப்பூா்: தாராபுரத்தில் அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலத்தை மீட்டு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம், நல்லம்மநாயக்கன்பேட்டையைச் சோ்ந்தவா் உபைதுல்லா மனைவி மஹபுநிஷா (70). கணவரை இழந்த இவா் வீட்டின் 3ஆவது மாடியில் தனியாக வசித்து வந்தாா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக மஹபுநிஷா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் சனிக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு சென்று பாா்த்தபோது மஹபுநிஷா இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தாராபுரம் காவல் துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT