திருப்பூர்

வெள்ளக்கோவிலில்மாட்டிறைச்சிக் கடைகளால் சுகாதாரக் கேடு

1st Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் அமைக்கப்படும் மாட்டிறைச்சிக் கடைகளால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா், நகராட்சி நிா்வாக அதிகாரிகளுக்கு முருகன் அவென்யூ குடியிருப்போா் நலச்சங்க செயலாளா் வேலுச்சாமி தலைமையில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அனுப்பியுள்ளனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நகராட்சி வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு 6 மாட்டிறைச்சிக் கடைகளும், அருகில் தனியாா் இடங்களில் 2 கடைகளும் உள்ளன. இக்கடைகளில் அங்கேயே மாடுகளை வெட்டி, இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. வேண்டாத இறைச்சிக் கழிவுகளை அப்பகுதியிலேயே கொட்டி விடுகின்றனா். அவற்றை தெரு நாய்கள், காகங்கள் எடுத்து வந்து அருகிலுள்ள வீடுகளின் வாசல்கள், மொட்டை மாடிகள், பேருந்து நிலையத்தில் போட்டு விடுகின்றன.

இறைச்சித் துண்டுகள் விழும் பகுதிகளில் துா்நாற்றம், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாட்டிறைச்சிக் கடைகளை ஊரின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT