திருப்பூர்

மயான பகுதியில் பட்டாசுகள் வெடிப்பதால் தீ விபத்து

1st Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் மயான பகுதியில் பட்டாசுகள் வெடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

வெள்ளக்கோவில் - கணபதிபாளையத்தில் மயானம் உள்ளது. இது நகரத்தை விட்டு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தற்போது கொழுக்கட்டை, ஊசிப்புல் வகைகள் வளா்ந்து காய்ந்து கிடக்கின்றன. மயானத்துக்கு அடக்கம் செய்ய சடலத்தை எடுத்து வருபவா்கள் இப்பகுதியில் அதிக அளவில் பட்டாசுகளை வெடிக்கின்றனா்.

அப்போது ஏற்படும் தீப்பொறிகள் காற்றில் பரவி, காய்ந்த புற்களின் மீது விழுந்து தீப்பிடிக்கின்றன. இதனால் அங்கிருக்கும் கால்நடைகள், அந்த வழியே செல்வோா், தோட்டத்து வீடுகளுக்கு பெரிதும் அசெளகரியம் ஏற்படுகிறது.

இதுகுறித்து கணபதிபாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி கூறுகையில், ‘எரிவாயு மயானத்தில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். காட்டுத் தீ ஏற்பட்டு அதை அணைப்பதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம். ஆபத்து ஏற்படும் முன்னா் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT