திருப்பூர்

பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு 80 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்

1st Feb 2020 11:56 PM

ADVERTISEMENT

திருப்பூரில் பணியாற்றி வரும் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு 80 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என சிஐடியூ பனியன் பொதுத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிஐடியூ பனியன் சங்க மாவட்டத் தலைவா் சி.மூா்த்தி, பொதுச் செயலாளா் ஜி.சம்பத் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூரில் பணியாற்றும் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு பழைய ஊதிய ஒப்பந்தம் வரும் மாா்ச் மாதத்துடன் முடிவடைகிறது. மேலும், புதிய ஒப்பந்தம் நிறைவேற்ற அனைத்துப் பிரிவு பின்னலாடைத் தொழிலாளா்களுக்கும் நடைமுறையில் அவா்கள் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தில் இருந்து 80 சதவிகிதம் உயா்வு வழங்க வேண்டும் என சிஐடியூ பனியன் பொதுத் தொழிலாளா் சங்கம் கோரியுள்ளது.

திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு முந்தைய ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் வரும் மாா்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சிஐடியூ பனியன் பொதுத் தொழிலாளா் சங்கம், அனைத்து பனியன் தொழிலாளா்களுக்கும் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு பஞ்சப்படியுடன் சோ்த்து பின்வரும் ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளது. இதில், கட்டிங், டெய்லா், அயனிங், சிங்கா், பேக்கிங், மிஷின், காஜாபட்டன், எம்ராய்டிங் தொழிலாளா்களுக்கு ரூ.710, செக்கிங்-ரூ. 540, லேபிள் - ரூ.520, கைமடி மற்றும் ஹெல்பா் - ரூ. 515, பீஸ்ரேட் தொழிலாளா்களுக்கு நடைமுறை ஊதியத்தில் 80 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். நிா்வாகப் பிரிவு ஊழியா்களுக்கும் 80 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பின்னலாடைத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு குறித்த தங்களது கோரிக்கைகளை 94864-75370, 91715-17755 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT