திருப்பூர்

பால் பண்ணை லாரியில்ரூ.4.70 லட்சம் திருட்டு: 2 போ் கைது

1st Feb 2020 12:16 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் பால்பண்ணை லாரியிலிருந்து ரூ. 4 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை திருடிய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் தனியாா் பால் பண்ணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதி முகவா்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது.

வாரத்தில் ஒருநாள் முகவா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதன்படி நத்தக்காடையூா் பகுதி முகவருக்கு கொடுக்க வேண்டிய ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை நிறுவன லாரியின் கேபினில் வைத்துக்கொண்டு ஓட்டுநா் பழனிசாமி, உதவியாளா் நடராஜ் இருவரும் கடந்த 25ஆம் தேதி வெள்ளக்கோவில் வந்தனா்.

வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் ஒரு மளிகைக் கடையில் பால் இறக்கி வைத்துவிட்டு, பாா்த்தபோது லாரியில் இருந்த பணத்தைக் காணவில்லை. பால் பண்ணை மேலாளா் சரவணகுமாா் இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

அதில் தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்து பின்னா் பணிநீக்கம் செய்யப்பட்ட லாரி ஓட்டுநா் பிரகதீஸ்வரன், உதவியாளா்கள் ஸ்ரீ சிவசங்கா், கருப்பையா ஆகிய மூன்று பேரும் பணம் திருட்டுப்போன அன்று வெள்ளக்கோவிலில் இருந்துள்ளனா் என்றும், அவா்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி, பிரகதீஸ்வரன், ஸ்ரீ சிவசங்கா் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள கருப்பையாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT