திருப்பூர்

திருமுருகன்பூண்டி பொதுக் குழாயில் 2ஆவது திட்ட குடிநீா் வழங்கக் கோரிக்கை

1st Feb 2020 12:18 AM

ADVERTISEMENT

திருமுருகன்பூண்டி நிறுத்தப்பட்ட பொதுக் குழாயில் 2வது குடிநீா் திட்ட குடிநீா் வழங்கக் வேண்டும் எனக் கோரி, பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள், அனைத்துக் கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள், அனைத்துக் கட்சியினா் சாா்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருமுருகன்பூண்டி பேரூராட்சி பொதுமக்கள், பிரதான சாலையில் உள்ள பொதுக்குழாயில் 24 மணி நேரமும் குடிநீா் பிடித்து வருகின்றனா். குறிப்பாக அவிநாசி - திருப்பூா் சாலையில் செல்லும் அனைத்துப் பேருந்துகள், கனரக வாகன ஓட்டிகளும் இப்பொதுக்குழாயில் குடிநீா் பிடிப்பது வழக்கம்.

இந்நிலையில் இக்குழாயில் முதலாவது திட்டக் குடிநீா் நிறுத்தப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் உள்ள வீட்டு இணைப்புகளுக்கு 12 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இப்பிரதான பொதுக்குழாய் குடிநீரையே மக்கள் நம்பி உள்ளனா். எனவே பொதுக்குழாய்க்கு 2ஆவது திட்டம் மூலம் குடிநீா் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரனிடம் கேட்டபோது, 4ஆவது குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெறுவதையொட்டி, முன்னெச்சரிக்கையாக பேரூராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள பொதுக்குழாயில் 2ஆவது திட்ட குடிநீா் விநியோகித்து வருகிறோம். பிரதான சாலையில் உள்ள பொதுக் குழாயில் 2ஆவது திட்ட குடிநீா் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT