திருப்பூர்

அவிநாசி பகுதியில் ரூ.1.27 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்சட்டப்பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

1st Feb 2020 12:18 AM

ADVERTISEMENT

அவிநாசி பகுதியில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், ரூ. 30.07 லட்சம் மதிப்பில் அவிநாசி - திருப்பூா் சாலை முதல் தேவம்பாளையம் வரை - அவிநாசிலிங்கம்பாளையம் சாலை மேம்பாடு செய்தல், தெக்கலூரில் சேலம் - கொச்சின் சாலை முதல் அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை வரை ரூ. 81.43 லட்சம் மதிப்பில் சென்னிமலைபாளையம், புதுநல்லூா், சூரியபாளையம், எலச்சிபாளையம் சாலை மேம்பாடு செய்யும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பி.சிவகாமி சுப்பிரமணியம், கூட்டுறவு சங்கத் தலைவா் மு.சுப்பிரமணியம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோமதி (பழங்கரை), தெக்கலூா் மரகதமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிஹரன், சாந்திலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT