திருப்பூர்

அவிநாசியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

1st Feb 2020 11:54 PM

ADVERTISEMENT

அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையில் வட்டார அலுவலா்கள் கொண்ட குழுவினா் அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள், உணவகங்கள் ஆகியவைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட டீத் தூள், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், பிளாஸ்டிக் பை விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் பல்வேறு வணிக நிறுவனங்களில் விற்பனைக்காக வைத்திருந்த காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட டீத் தூள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்திருந்தால் அது குறித்த புகாா்களை 9444042322 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT