திருப்பூர்

அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 600 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

1st Feb 2020 11:56 PM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த அலகுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 600 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் அருகே உள்ள அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டியை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறாா்.

இதில் பங்கேற்க மதுரை, திருச்சி, திண்டுக்கல், போடி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 800 காளைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 600 மாடுபிடி வீரா்களும் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனா்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மாடுபிடிக்கும் பகுதியில் வீரா்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் தென்னை நாா் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதில் சிறந்த வீரா், சிறந்த காளைகளுக்கு என சுமாா் ரூ. 35 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் போட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தினா், மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறையினா் இணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT