திருப்பூர்

திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக வெங்கு ஜி.மணிமாறன் பொறுப்பேற்பு

31st Dec 2020 04:10 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக வெங்கு ஜி.மணிமாறன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூரில் உள்ள மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக காங்கயம் நகர அதிமுக செயலரும். காங்கயம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வெங்கு ஜி.மணிமாறன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் எம்.எல்.ஏ., உ.தனியரசு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத் தலைவர் மனோகரன், துணைத் தலைவர் சிவகுமார், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ் குமார், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT