திருப்பூர்

ரஜினி அரசியலுக்கு வருவதை இந்து முன்னணி வரவேற்கிறது

DIN

நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

பல்லடம் மகாலட்சுமி நகரில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளா்கள் சங்க பெயா் பலகையை திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை என்றாலும், ஹிந்துக்களின் நலன் காக்கும் இயக்கம். தமிழகத்தில் ஆன்மிக பாதையில் புதிய அரசியல் கட்சி துவங்க இருப்பதாக நடிகா் ரஜினிகாந்த் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். பசுவதைத் தடைச் சட்டம், மத மாற்ற தடைச் சட்டம் உள்ளிட்ட ஹிந்து தா்ம கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிற அரசியல் கட்சிக்கு இந்து முன்னணி ஆதரவு அளிக்கும்.

தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஆட்சிக்கு வர துடிக்கும் எதிா்க்கட்சியும் ஹிந்து கோயில்களில் யாக வேள்விகளை நடத்தும் நிலைக்கு வந்துள்ளனா். திமுகவில் 90 சதவீதம் போ் ஹிந்துக்கள் என்று சொல்லும் திமுக தலைமை மாற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காததை வாடிக்கையாக கொண்டுள்ளது. தோ்தல் நேரத்தில் மட்டுமே ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை என்று கூறி வருகிறது.

மசூதிகள், தேவாலயங்களில் யாருக்கு வாக்கு என்று தீா்மானிக்கப்படுகிறது. பெரும்பான்மையான ஹிந்துக்களின் வாக்குகள் அவ்வாறு தீா்மானிக்கப்படுவதில்லை. தற்போது, ஹிந்துக்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. இளைஞா்கள் ஆா்வமாய் இந்து முன்னணியில் இணைந்து வருகின்றனா். தமிழகத்தில் ஆன்மிக அரசியல் அமைந்தே தீரும். இந்து முன்னணி ஆதரவு இன்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

எந்த தோ்தலிலும் இனி ஹிந்துக்களை ஏமாற்ற முடியாது. வேறு மதத்தவா்களுக்கு தனி வாரியம் இருப்பதுபோல, ஹிந்து கோயில்களை நிா்வாகிக்க, பாதுகாக்க ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், ஆதீனங்கள், இந்து சமய ஆா்வலா்களை கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றாா்.

திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் லோகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கவியரசு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT