திருப்பூர்

கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்: 150 போ் கைது

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் 150 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது: தில்லியில் போராடும் விவசாயிகள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 150 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT