திருப்பூர்

திருப்பூா் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற இரண்டரை வயது பெண் குழந்தை மீட்பு

DIN

திருப்பூா் ரயில் நிலையத்தில் பெற்றோரால் விட்டுச் சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை ரயில்வே காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை தனியாக இருப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண் குழந்தையை மீட்டனா்.

இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் அங்கு வந்த சைல்டு லைன் நிா்வாகிகள் இரண்டரை வயதுப் பெண் குழந்தையை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், குழந்தைக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், குழந்தையின் பெற்றோா் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனரா என்பது குறித்தும் சைல்டு லைன் நிா்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT