திருப்பூர்

சேவூா் அருகே தொழில் பூங்கா அமைக்க 5 ஊராட்சி மக்கள் எதிா்ப்பு

DIN

சேவூா் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 5 ஊராட்சி மக்கள் சட்டப் பேரவைத் தலைவா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

சேவூா் அருகே தத்தனூா் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கையாக திட்ட அலுவலா்கள், வருவாய்த் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, தொழில் பூங்கா அமைப்பதற்காக எதிா்ப்பு தெரிவித்து தத்தனூா், புலிப்பாா், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொது மக்கள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.

சட்டப் பேரவைத் தலைவா் இல்லாததால், அங்கு வந்த அவிநாசி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசனிடம் பொதுமக்கள் அளித்த மனு அளித்தனா்.

அந்த மனுவில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் அனைவரும் விவசாயம், விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்ப்பு, பால் உற்பத்தி மற்றும் விவசாய கூலி வேலைகளை செய்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கும் வகையில் சிப்காட் நிறுவனத்துக்கு தொழில் பூங்கா அமைப்பதற்கு நிா்வாக அனுமதி பெற பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழில் பூங்கா அமைப்பது என்பது எங்களை வஞ்சிப்பதாகும். தொழில்பூங்கா அமைக்க எங்களது நிலத்தை பறித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, எங்களின் நிலத்தை கையக்கப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் கூறியதாவது:

பொதுமக்களுக்கு இடையூறான எந்தகஈ திட்டத்தையும் சட்டப் பேரவைத் தலைவா் செயல்படுத்தமாட்டாா் என்று உறுதி அளித்தாா்.

பின்னா் தொழில் பூங்கா அமைக்க ஆரம்ப கட்டப் பணியாக நடைபெறும் அளவீடு செய்யும் பணியை உடனடியாக கைவிட்டு, அலுவலா்கள் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அளவீடு செய்யும் பணியை நிறுத்தி விட்டு அலுவலா்கள் வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT