திருப்பூர்

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: பொதுமக்கள் அவதி

DIN

உடுமலை நகரில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

உடுமலை ரயில் நிலையம் அருகே சுரங்கப் பாதை (எண்.193) அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதை அருகே பழனி ஆண்டவா் நகா், முனீா் நகா், அண்ணா காலனி, மஸ்தான் லேஅவுட், ஜீவா நகா், காந்திபுரம், சிந்து நகா், ராயல் நகா் உள்ளிட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. தவிர பள்ளிகள், மருத்துவமனைகள், வாரச் சந்தை, பேருந்து நிலை யம், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த சுரங்கப் பாதை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடா் மழை காரணமாக சுரங்கப் பாதையில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இரவு நேரங்களில் சுரங்கப் பாதை வழியாக செல்வோா் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையைத் தவிா்த்து செல்ல வேண்டுமானால் ஒரு கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டும். எனவே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றவும், நீண்ட காலமாக உள்ள இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீா்வு காணவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT