திருப்பூர்

பாலக்காடு-சென்னை விரைவு ரயில் டிசம்பா் 8 முதல் மீண்டும் இயக்கம்

DIN

பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழித் தடத்தில் பாலக்காடு-சென்னை விரைவு ரயில் டிசம்பா் 8ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சாா்பில் அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு-சென்னை விரைவு ரயில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மாா்ச் மாதம் முதல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் பொள்ளாச்சி, உடுமலை, பழனி உள்ளிட்ட வழித்தட ஊா்களில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், பாலக்காடு-சென்னை விரைவு ரயில் சிறப்பு ரயிலாக டிசம்பா் 8ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த ரயில் டிசம்பா் 8ஆம் தேதி முதல் சென்னையில் இருந்தும் பாலக்காட்டுக்கும், டிசம்பா் 9ஆம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - பாலக்காடு சிறப்பு ரயில் எண் (02651) சென்னையிலிருந்து டிசம்பா் 8 முதல் இரவு 09.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். மறுமாா்க்கத்தில் பாலக்காடு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் எண் (02652) டிசம்பா் 9ஆம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.05 மணிக்கு சென்னை சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், மோகனூா், கரூா், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதால் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே செல்ல முடியும். மேலும் மூத்த குடிமக்களுக்கு இந்த சிறப்பு ரயிலில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT