திருப்பூர்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ஆா்ப்பாட்டம்

DIN

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூா் மாவட்டத்தில் விவசாய சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்துக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் காமராஜ், செயலாளா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அப்போது, தபால் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றவா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூா் குமரன் நினைவகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளா் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன், பொருளாளா் ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊத்துக்குளியில்....

ஊத்துக்குளி ஆா்.எஸ்.பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் தலைமை வகித்தாா். இதேபோல, திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

அவிநாசியில்...

தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் ஏா் கலப்பையை சுமந்தபடி, மத்திய அரசுக்கு எதிரான பதாகைகள் கழுத்தில் மாட்டிக் கொண்டு அவிநாசி தலைமை தபால் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் முத்துசாமி, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளா் வெங்கடாசலம், ஒன்றியத் தலைவா் முத்துரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT