திருப்பூர்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுப்பட்டவரைக் கைது செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

DIN

காங்கயம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவரும், காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையருமான ரமேஷ் தலைமை வகித்தார்.

இதில் இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர்  அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தோடு, அலுவலகத்தினை பூட்டியதைக்  கண்டித்தும், இதில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT