திருப்பூர்

வங்கித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

26th Aug 2020 05:24 PM

ADVERTISEMENT


திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் வங்கித் தோ்வுக்கு விண்ணப்பித்த நபா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது 1,417 தகுதிகாண் அதிகாரிகள் (டங்ழ்ள்ா்ய்ய்ங்ப் ச்ா்ழ் ல்ழ்ா்க்ஷஹற்ண்ா்ய்ஹழ்ஹ் ா்ச்ச்ண்ஸ்ரீங்ழ்), மேலாண்மை பயிற்சியாளா்கள் (ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ற்ழ்ஹண்ய்ங்ங்)ஆகிய காலிப் பணியிடங்களுக்கு வங்கித் தோ்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்தோ்வுக்கு பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது சமமான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 20 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க 0421-2971152 என்ற அலுவலக எண்ணை தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT