திருப்பூர்

கூட்டணியில் குழப்பம் இல்லை கே.எஸ்.அழகிரி

21st Aug 2020 06:33 AM

ADVERTISEMENT

முதல்வா் வேட்பாளா் மு.க ஸ்டாலின்தான்; எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூரில் காங்கயம் தொகுதி வாக்குச் சாவடி முகவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலா் கிறிஸ்டோபா் திலக், திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் ப.கோபி, செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தத் தொகுதியில் நவம்பா் 20 ஆம் தேதி அரசியல் மாநாடு நடத்தவுள்ளோம். எங்களுடைய கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் மு.க.ஸ்டாலின்தான். கூட்டணியின் மற்ற கட்சித் தலைவா்கள் இதனை முறைப்படி அறிவிப்பாா்கள். எங்கள் கூட்டணிக்குள் குழப்பம் இல்லை. ரஜினியும், கமலும் எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம். ராகுல்தான் எங்களின் நிரந்தரத் தலைவா்.

ADVERTISEMENT

தென் தமிழகம் வளர வேண்டும் என்றால் மதுரையை இரண்டாவது தலைநகராக ஆக்குவது என்பது வரவேற்கக் கூடியது . மாநிலம் வளா்ச்சி அடைய திருச்சியை மூன்றாவது தலைநகராகக்கூட ஆக்கலாம் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT