திருப்பூர்

தாராபுரம் வருவாய் கோட்டத்தில் 40 கிராம நிா்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்

20th Aug 2020 08:39 AM

ADVERTISEMENT

தாராபுரம் வருவாய் கோட்டத்தில் 40 கிராம நிா்வாக அலுவலா்களை பணியிடமாற்றம் செய்து சாா் ஆட்சியா் பவன்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மானூா்பாளையத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த ரம்யா மூலனூருக்கும், வேளாம்பூண்டியில் பணியாற்றி வந்த பிரபு கொளத்துப்பாளையத்துக்கும், சின்ன மருதூரில் பணியாற்றி வந்த சிவசாமி சித்ராவுத்தன்பாளையத்துக்கும், நந்தவனம் பாளையத்தில் பணியாற்றி வந்த சதீஷ்குமாா் குண்டடத்துக்கும், வரப்பாளையத்தில் பணியாற்றி வந்த வேலுசாமி சின்னக்கம்பாளையத்துக்கும், கோவிந்தாபுரத்தில் பணியாற்றி வந்த தனலட்சுமி ஆலம்பாளையத்துக்கும், பெல்லம்பட்டியில் பணியாற்றி வந் தா்மராஜ் கன்னிவாடிக்கும், நஞ்சத்தலையூரில் பணியாற்றி வந்த காா்த்திக் வெள்ளவாவிப்புதூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, தாராபுரம் வடக்கில் பணியாற்றி வந்த பத்மநாபன் செலாம்பாளையத்துக்கும், அலங்கியத்தில் பணியாற்றி வந்த அன்பரசு காங்கேயம்பாளையத்துக்கும், கொழுமங்குழியில் பணியாற்றி வந்த இந்திரா கொளிச்சிவாடிக்கும், தொப்பம்பட்டியில் பணியாற்றி வந்த மேகலா தாராபுரம் தெற்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல் தாராபுரம் வருவாய் கோட்டத்தில் மொத்தம் 40 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT