திருப்பூர்

மூலனூரில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை 

14th Aug 2020 07:14 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. 

இந்த வார ஏலத்துக்கு திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல்,ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 730 விவசாயிகள் தங்களுடைய பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். 

திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 22 வணிகர்கள் வந்திருந்தனர். இந்திய பருத்தி கழகமும் கொள்முதல் செய்தது. சராசரி விலை குவிண்டால் ரூ.5,350 க்கு விற்பனையானது. வணிகர்கள் சராசரி விலை குவிண்டால் ரூ. 4,350 க்கு வாங்கினர். 

மொத்தம் 4,112 குவிண்டால் வரத்து இருந்தது. திருப்பூர் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் தர்மராஜ், மகுடேஸ்வரன் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : tirupur
ADVERTISEMENT
ADVERTISEMENT