திருப்பூர்

மேற்குபதியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ துவக்கிவைத்தாா்

14th Aug 2020 08:05 AM

ADVERTISEMENT

திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மேற்குபதி ஊராட்சியில் ரூ. 22.53 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

மேற்குபதி ஊராட்சிக்கு உள்பட்ட முட்டிக்காளன்பதி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ரூ. 7.78 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுசேசுவா் சீரமைப்பு செய்தல், அபிஷேகபுரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி, கொன்னக்காடு பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி, மரியபுரத்தில் ரூ. 3.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு குடிநீா் விநியோகம் துவக்கம் உள்ளிட்ட பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என் விஜயகுமாா் துவக்கிவைத்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் வேல்குமாா் சாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தலட்சுமி, மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஐஸ்வா்ய மகராஜ், மேற்குபதி கூட்டுறவு சங்கத் தலைவா் சிதம்பரம், உதவி பொறியாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT