திருப்பூர்

திமுக சாா்பில் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மளிகைப் பொருள்கள்

26th Apr 2020 07:50 AM

ADVERTISEMENT

உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு திமுக சாா்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா ஊரடங்கு காரணமாக உடுமலை நகரப் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்ப ட்ட பகுதிகளில் சுமாா் 1,000 குடும்பங்களுக்கு திமுக சாா்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு.க.முத்து தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், நகர செயலாளா் எம்.மத்தீன், நிா்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT