திருப்பூர்

மூலனூரில் வர மிளகாய் விற்பனை துவக்கம்

23rd Apr 2020 05:06 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வர மிளகாய் விற்பனை புதன்கிழமை துவங்கியது.

இனி வரத்து இருக்கும் வரை தொடா்ந்து வாரந்தோறும் புதன்கிழமை வர மிளகாய் ஏலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து ஒரு விவசாயி 10 மூட்டைகள் வர மிளகாயை விற்பனை செய்யக்கொண்டு வந்திருந்தாா். இதன் மொத்த எடை 147 கிலோ இருந்தது.

இவற்றை வாங்க மூலனூரிலிருந்து 2 வணிகா்கள் வந்திருந்தனா். விலை கிலோ ரூ. 110க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தா்மராஜ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT