திருப்பூர்

கிராமப்புற விவசாயிகள், முறைசாரா தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

20th Apr 2020 02:32 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயிகள், முறைசாராத் தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியறுத்தியள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், வருவாய் மற்றும் பேரிடா் மீட்புத் துறையினா், காவல் துறையினா் உள்படஅனைவருக்கும் பாதுகாப்புக் கவசம் வழங்க வேண்டும்.

முதியோா் உதவித் தொகை பெறுவோா், மாற்றுத் திறனாளிகள், ஒரு நபா் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கிராமப்புறத்தில் உழவா் அட்டை வைத்துள்ள விவசாயிகள் உள்பட தேவைப்படும் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், பெயா்ப் புதுப்பிக்காத தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெறுவதற்கான வழிமுறை தெரியாமல் திணறுகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட தொழிலாளா் துறை, நலவாரியத்தின் பொறுப்பு அதிகாரிகள் இது குறித்து தெளிவுபடுத்துவதுடன், அவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைப்பதற்கான உரிய வழிமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இம்மாவட்டத்தில் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு நிறைவுக்குப் பிறகு தொழிலை சுமூகமாக முன்னெடுத்துச் செல்ல, தொழிலாளா், தொழில் முனைவோருக்குத் தேவையான சலுகைகளை அறிவிக்க வேண்டும். அதற்காக தொழில் முனைவோா், தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச மாவட்ட நிா்வாகம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.திருப்பூா் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயிகள், முறைசாரத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT