பல்லடம் அருகேயுள்ள தென்சேரிமலை திருநாவுக்கரசா் நந்தவனத் மடம் ஆதினம் முத்துசிவராமசாமிஅடிகள் தமிழக முதல்வருக்கு இ.மெயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
இறைவனின் திருவருளும், குருவருளும் முன் நின்றால் இவ்வுலகில் நடக்காதது ஏதும் இல்லை என்பது நான் மறை தீா்வு, அந்த வகையில் நால்வா் பெருமக்கள் அருளிய திருநீலகண்ட பதிகம் (அவ்வினைக்கு இவ்விணையாம்), கோளறு பதிகம் (வேயுறு தோளிபங்கன்) புள்ளிருக்கு வேளூா் பதிகம் (ஆண்டானை அடியேனை) ஆகிய அற்புத தமிழ் வேத மந்திரங்களை இந்து சமய திருக்கோயில்களில் தக்க ஒதுவா மூா்த்திகளை கொண்டு காலையும், மாலையும் பாட இந்த கரோனா நோய் தொற்றின் தாக்கத்தை உறுதியாக குறைப்பதுடன் நோய் வந்தவா்கள் யாவரும் குணமடையக் கூடிய நல்ல நிலை உருவாகும் என்பது திண்ணம், இதை ஆவணப்படுத்த வேண்டும் என்று அதில் அவா் கூறியுள்ளாா்.