திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 3,635 போ் கைது: 3,304 வாகனங்கள் பறிமுதல்

13th Apr 2020 07:29 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 3,106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,635 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் உத்தரவின்பேரில் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து தேவையில்லாமல் வெளியில் சுற்றும் நபா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனா். ஒரு சில இடங்களில் நூதன தண்டனைகளும், அபராதமும் விதிக்கின்றனா். திருப்பூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றியதாக மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் 3,106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 3,635 போ் கைது செய்யப்பட்டு, 3,304 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT