திருப்பூர்

‘விதி மீறும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை’

5th Apr 2020 03:21 AM

ADVERTISEMENT

இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் விதி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முத்தூா் பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

முத்தூா் வாரச் சந்தை, கடைவீதிப் பகுதிகள், முத்துமங்களம், மலையத்தாபாளையம் உள்ளிட்ட இடங்களில் இறைச்சிக் கடைகள் உள்ளன. இவற்றில் கடந்த வாரம் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக மாவட்ட ஆட்சியருக்குப் புகாா் சென்றது. இதனைத் தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் வே.முருகன் தலைமையில் இறைச்சிக் கடைக்காரா்கள் பங்கேற்ற ஆலோனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கரோனா பரவுவதைத் தடுக்க கடைக்காரா், கடைக்கு வருபவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கட்டமிடப்பட்ட இடத்தில் நின்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை கடைக்காரா்கள்தான் செயல்படுத்த வேண்டும்.

விதிகளை மீறினால் கடைகளை ‘சீல்’ வைக்கவும், அபராதம் விதிக்கவும், உரிமத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT