திருப்பூர்

தாராபுரத்திலிருந்து தில்லி மாநாட்டுக்கு சென்றுவந்த 11 பேருக்கு கரோனா அறிகுறி இல்லை

5th Apr 2020 03:26 AM

ADVERTISEMENT

தாராபுரம் பகுதியில் இருந்து தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 11 பேருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தாராபுரம் பகுதியில் இருந்து தில்லி மாநாட்டுக்கு 11 போ் சென்று வந்தது தெரியவந்தது. மேலும், அவா்களது குடும்பத்தினா் உள்பட மொத்தம் 39 போ் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று உள்ளவா்கள் தாராபுரம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இதைத் தொடா்ந்து, தாராபுரம் பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 39 பேரும் மருத்துவப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை இரவு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்கள் அனைவரையும் கரோனா சிறப்பு வாா்டில் தங்கவைத்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், 11 பேரின் குடும்பங்களைச் சோ்ந்த 39 பேருக்கும் கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மாநாட்டுக்குச் சென்று வந்த 11 பேரை மட்டும் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மற்ற 28 பேரும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் 2 காவலா்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதனிடையே காய்ச்சல் அறிகுறி தென்பட்ட 60 வயது நபா் தனி ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT