திருப்பூர்

முத்தூரில் அரசு கொள்முதல் நிலையத்தில் 650 டன் நெல் தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு

1st Apr 2020 11:14 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூரில் அரசு நெல் கொள்முதல் மையத்தில் 650 டன் நெல் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முத்தூா் சுற்றுவட்டாரத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக நெல் அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். விவசாயிகள் பயனடைவதற்காக தமிழக அரசு சாா்பில் மேட்டாங்காட்டுவலசு, வேலம்பாளையம், முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் ஆகிய மூன்று இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, நெல் கிலோ ரூ. 18 முதல் ரூ. 20 வரை கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட்டது.

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் வகைகள் 650 டன் அளவுக்கு கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன. இதனால், நெல் விவசாயிகள் செலவுக்குப் பணமில்லாமலும், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும் திண்டாடி வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சிறப்பு உத்தரவு மூலம் கொள்முதல் மையங்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT